EN
International

அமெரிக்க துணை ஜனாதிபதியின் பாகிஸ்தான் பயணம் இரத்து

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் பாகிஸ்தான் பயணத்தை இரத்து செய்துள்ளார்.

அமெரிக்கா – ஈரானின் இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நிலையில் அந்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.

பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் ஈரான் பிரதான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழியான ஹோர்முஸ் நீரிணையை மூடியது.

இது உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அமெரிக்கா இரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இன்று அந் நிகழ்வு இரத்து செய்யப்பட்டது.

Related Articles

Back to top button