EN
Local

கொச்சிக்கடை பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நாளை (21) நடைபெறவுள்ள விசேட ஆராதனையை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 07 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த ஆராதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக மேற்படி விசேடபோக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி, நாளை காலை 7.00 மணி முதல் ஆராதனை நிறைவடையும் வரை தேவாலயத்தை சுற்றியுள்ள வீதிகளில் அவ்வப்போது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button