EN
Local

சுவர் இடிந்து வீழ்ந்து இராணுவ சிப்பாய் பலி

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் நேற்று (17) பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஜனககம, மாதிவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவராவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button