EN
Local

பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கையை விடுப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (11) மாலை 4:00 மணி முதல் நாளை (12) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும்.

இதனைத் தவிர, 6 மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் நிலை அல்லது ‘அவதானமாக இருக்கவும்’ எனும் மண்சரிவு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

  • பதுளை மாவட்டம்: பண்டாரவளை பிரதேச செயலகப் பிரிவு.
  • களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவு.
  • குருணாகல் மாவட்டம்: ரிதிகம பிரதேச செயலகப் பிரிவு.
  • மாத்தளை மாவட்டம்: ரத்தோட்டை, அம்பன்கங்கை கோரளை மற்றும் நாவுல பிரதேச செயலகப் பிரிவுகள்.
  • மொனராகலை மாவட்டம்: வெல்லவாய மற்றும் படல்கும்புர பிரதேச செயலகப் பிரிவுகள்.
  • இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி மற்றும் கலவானை பிரதேச செயலகப் பிரிவுகள்.

Related Articles

Back to top button