International
சீனாவைச் சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்

மேற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர்ப் பதற்றம் நீடித்து வரும் சூழலில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி இன்று (06) புதன்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கை சென்றடைந்துள்ளார்.
அங்கு அவர் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உடன் இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய சர்வதேசப் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகச் சர்வதேச ஆதரவைத் திரட்டும் நோக்கில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் கடந்த சில வாரங்களாகப் பல்வேறு நாடுகளுக்கு இராஜதந்திரப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
ஈரானின் மிக நெருங்கிய நட்பு நாடாகவும், அந்நாட்டின் மசகு எண்ணெய்யை அதிகளவில் வாங்கும் முக்கிய நாடாகவும் சீனா விளங்குவதால், இந்தப் பயணம் சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.




