EN
International

இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே பத்து நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். சுமார் பல தசாப்தங்களுக்கு பிறகு கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற நேரடி பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த போர் நிறுத்தம் இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை (17) அதிகாலை 2.30 முதல் அமுலுக்கு வந்தது. இதை வரவேற்கும் வகையில் பெய்ரூட்டில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்று ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். போர் நிறுத்தத்தை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டு தலைவர்களை வெள்ளை மாளிகை வருமாறு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த 1983ஆம் ஆண்டுக்கு பிறகு இருநாட்டு தலைவர்களும் உயர்மட்ட அளவில் நேரில் சந்தித்து பேச இருப்பது இதுவே முதல் முறையாகும். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் மிக ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், நிரந்த அமைதியை எட்ட துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினருக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button