வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றிய இலங்கை

Sri Lanka Women’s Cricket Team, Bangladesh Women’s Cricket Team அணிக்கு எதிரான டி20 தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி Sylhet நகரில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் Chamari Athapaththu 37 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்தார். அதேவேளை, அதிரடியாக விளையாடிய Harshitha Samarawickrama 29 பந்துகளில் 49 ஓட்டங்கள் (2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) குவித்தார்.
மேலும், Nilakshi de Silva ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் இலங்கை அணி 20 ஓவர்களில் 154 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் இலக்கைத் துரத்திய வங்காளதேச அணி, இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 133 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
வங்காளதேச அணியில் Sharmin Akhter 44 ஓட்டங்களும், Juwairiya 29 ஓட்டங்களும், Dilara Akter 23 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி டி20 தொடரை கைப்பற்றியதுடன், முன்னதாக ஒருநாள் தொடரையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.





